வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:55 IST)

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் நிலவி வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து, வெயில் தகிப்பைத் தணிந்து வருகிறது.

இந்த நிலையில்,தமிழகத்தில் 3  மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,   தமிழகத்தில்  நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையில், 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.