செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (14:44 IST)

”அது அந்த காலம், இது இந்த காலம்”..புகுந்த வீட்டில் ஜாலியாக வாழப்போகும் பெண்ணின் வைரல் வீடியோ

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் ஒருவர் சந்தோஷமாக டிக் டாக் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

நம்மில் பலர், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போகும் பெண்கள், தனது பெற்றோர்களை பிரிகின்ற சோகத்தில் அழுது தான் பார்த்திருப்போம்.

ஆனால் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு காரில் போகும் வழியிலே சந்தோஷமாக ஒரு பாடலுக்கு டிக் டாக் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகுந்த வீட்டிற்கு போகும்போது அழுதுகொண்டே போவது அந்த காலத்து டிரெண்டு, தற்போது ஜாலியாக புகுந்த வீட்டிற்கு போவது தான் இந்த காலத்து டிரெண்ட் என பலர் இந்த வீடியோவிற்கு பின்னோட்டமிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.