1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (18:42 IST)

பாம்பு, முதலைகளை கொண்டு மோடியை கொல்வேன்!? – பாகிஸ்தான் பாடகியின் வைரல் வீடியோ

பிரபல பாகிஸ்தான் பாடகி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதாக பாம்பு, முதலைகளை வைத்துக்கொண்டு பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் பிரபல பாடகி ரபி பிர்ஸாடா. இவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கை நிறைய விஷ பாம்புகளை அவர் வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் கிடக்கின்றன. அவற்றை குறிப்பிட்டு பேசும் ரபி “மோடி நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி உள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நான் என்ன பரிசு வைத்திருக்கிறேன் என பாருங்கள். எனவே சாவதற்கு தயாராக இருங்கள். எனது நண்பர்கள் உங்களை சாப்பிட்டு விடுவார்கள்” என்று பேசுகிறார்.

சமீபத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை இந்தியாவுடன் யூனியன் பிரதேசமாக இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரபி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் மலைப்பாம்புகளை கையில் ஏந்தியபடி பாடல்கள் வேறு பாடுகிறார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், பலர் இதெல்லாம் ஒரு விஷயமா என்ற அளவிற்கு ரபியை கமெண்டில் சென்று கிண்டலடித்திருக்கிறார்கள்.

அந்த கமெண்டில் ஒருவர் ”பாம்பு, முதலையெல்லாம் எங்கள் மோடி சிறு வயதிலேயே கையில் பிடித்து விளையாடியிருக்கிறார்” என்று நக்கலாக பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.