சிஎஸ்கே அணியுடன் மோதி 4 முறை மண்ணை கவ்விய ஐதராபாத்

Last Modified திங்கள், 28 மே 2018 (07:57 IST)
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் ஐதராபாத் அணி நான்கு முறை மோதி நான்கு முறையும் தோல்வி அடைந்துள்ளது.
ஐபிஎல் 2018 தொடரில் ஐதராபாத் அணி லீக் போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனாலும் சென்னை அணியை ஐதராபாத் அணி ஒருமுறை கூட வீழ்த்தவில்லை.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற முதல் லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், மே 13ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், மே 22ஆம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மற்றும் இறுதி போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் சென்னை அணியுடன் மோதி தோல்வி அடைந்தது.

அபாரமான பந்துவீச்சாளர்களை கொண்ட ஐதராபாத் அணி, முதலில் பேட் செய்து குறைந்த ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெற்று வந்த நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 179 ரன்கள் எடுத்தபோதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :