செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 23 ஜனவரி 2020 (16:48 IST)

காங்கிரஸ் மீது இவ்வளவு பற்றா? குழந்தை பேரே ”காங்கிரஸ்”தானாம்!

ராஜஸ்தானில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் ஜெயின். ராஜஸ்தான் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பாரம்பரியமாகவே காங்கிரஸ் குடும்ப பிண்ணனியில் வளர்ந்தவர் வினோத் ஜெயின். அதனால் தனது ஆண் குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைப்பதாக முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது வீட்டில் அதற்கு பெரும் எதிர்ப்பு இருந்துள்ளது.

பிறகு உறவினர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து தன் குழந்தைக்கு காங்கிரஸ் என்றே பெயர் சூட்டியுள்ளார். தற்போது அந்த குழந்தை மற்றும் காங்கிரஸ் என பெயரிடப்பட்ட பிறப்பு சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.