போராட்ட பூமியாகும் உத்தர பிரதேசம்; ஜனாதிபதி ஆட்சி தேவை! – உச்சநீதிமன்றத்தில் மனு!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:34 IST)
உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து போராட்ட்ங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த சிலர் முயர்சிப்பதால் மாநிலத்தில் ஹத்ராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர உத்தர பிரதேச மாநில எல்லைகளிலும் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உத்தர பிரதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் மாநிலத்தை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யோகி ஆதித்யநாத் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோவில் பணிகளில் கவனம் செலுத்தலாம் என மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :