செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (11:34 IST)

காஷ்மீர் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் ட்ரெய்னிங்! – பின்னணியில் செயல்பட்ட தலைவர்கள்!

காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சிகளை அளிக்க பிரிவினைவாத தலைவர் உதவியதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்திய ராணுவமும், தேசிய புலனாய்வு முகமையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் கடந்த 2016 முதல் 2018 வரையான காலத்தில் பல்வேறு காஷ்மீர் இளைஞர்களை பிரிவினைவாத தலைவர்கள் உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சில வாரங்கள் வரை பயிற்சி பெற்ற அவர்களை ஆரம்பத்தில் ஸ்லீப்பர்செல்களாகவும், பிறகு பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.