புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (15:06 IST)

10 கோடி பார்வையாளர்களை கடந்து ''பத்தல பத்தல ''பாடல் சாதனை!

vikram audio
விக்ரம் படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிலான பத்தல பத்தல பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து, சூர்யா, பகத்பாசில், விஜய்சேதுபதில், நரேன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்  நடித்திருந்தனர்.

இந்த ஆண்டில் வெளியான இத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது . அத்துடன் 400 கோடிக்கு மேல்  வசூல் குவித்து சாதனை படைத்தது.

இப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற பத்த பத்தல என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.

இப்பாடல், யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை( 10 கோடி) பெற்று சாதனை படைத்துள்ளது.

இதை கமல் ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர்.

 Edited By Sinoj