1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (15:28 IST)

ரஜினிகாந்தின் 72 வது பிறந்தநாள்- முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த  நாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின், கமல்ஹாசன், ரசிகர்கள்  உள்ளிட்டோர் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இன்று ரஜினிகாந்த்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் பட முக்கிய அறிவிப்பு மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் தன் டுவிட்டர் பக்கத்தில், ''தமிழ்த்திரை உலகில் 45 ஆண்டு காலத்திற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்துகொண்டு, தனது மனம் கவரும் நடிப்பாற்றல் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா #ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! ''எனத் தெரிவித்துள்ளார்.


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,'' அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj