ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 மே 2024 (14:01 IST)

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

Rajasthan
வடமாநிலங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர் வெறும் மண்ணில் பப்படம் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் சமீபமாக பெய்த கோடை மழையால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. ஆனால் வட மாநிலங்களில் வெப்பம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாது ராணுவ வீரர்கள் பல பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் பகுதியில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அங்குள்ள பாலைவன மணலில் ராணுவ வீரர் ஒருவர் பப்படத்தை மண்ணில் புதைக்கிறார். சில நிமிடங்கள் கழித்து அதை எடுக்கும்போது அது அடுப்பில் போட்டு எடுத்தது போல பொறிந்து வர அதை உடைத்து காட்டுகிறார். இதன்மூலம் அங்கு நிலவும் வெப்பநிலையை அவர் விளக்க முயல்கிறார்.

அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்பத்திற்கான ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இவ்வளவு வெப்பத்திலும் நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பாடுபட்டும் அவர்களுக்கு பலரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K