செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (11:33 IST)

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

கள்ளக்காதலை கணவர் மற்றும் குடும்பத்தினர் ஏற்காததால் இளம் பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி அண்டவர் மகேஷ் என்ற 42 வயது நபருடன் கள்ளக்காதலில் இருந்ததாக தெரிகிறது. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு மகேஷ் உடன் விஜயலட்சுமி ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு குடும்பத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த விஜயலட்சுமி தனது கள்ளக்காதலன் மகேஷ் உடன் இணைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்த தற்கொலை இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva