ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மே 2024 (12:22 IST)

100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபரீதம்..!

இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக 100 அடி உயரத்திலிருந்து ஏரியில் குறித்த இளைஞர் பரிதாபமாக பலியான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
 இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோவுக்காக பலர் ரிஸ்க்கான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தஜீப் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏரியல் குளிக்க சென்றார். 
 
அப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்வதற்காக 100 அடி உயரத்தில் இருந்து அந்த இளைஞர் குதித்ததாக தெரிகிறது. அவர் குதிப்பதை நண்பர்கள் வீடியோ எடுத்த நிலையில் வெகுநேரமாக தண்ணீரில் இருந்து தஜீப் வெளியே வரவில்லை. 
 
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் நீந்தி சென்று அவரை தேடிய போது ஏரியின் ஆழத்தில் மூழ்கி அவர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தஜீப் உடலை மீட்ட நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran