செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (16:58 IST)

கழிப்பறை கட்ட வேண்டுமென்றால் என்னுடன் ஒத்துழைத்து போ; அரசு அதிகாரி

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி, பெண் ஒருவரின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணி ஒழுங்காக நடைபெற வேண்டுமென்றால் தன்னுடன் பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் மட்டுமே கழிப்பறை கட்டித் தர முடியும் என மிரட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தில் துணை இன்ஜினியராக பணியாற்றி வருபவர் சாரதி. அவரை 32 வயதான பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ்  கழிப்பறை அமைக்க அணுகியுள்ளார். அதற்கு அவர் என்னுடன் பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் மட்டுமே கழிப்பறை தட்டி தரமுடியும் என்று கூறியதாக, அப்பெண் சாரதி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 
எனவே அந்த பெண் சாரதி மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் 509(b) சட்டத்தின் கீழ் சாரதி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.