அந்தமான் நிகோபார் தீவு அருகே நிலநடுக்கம்!
வங்கக்கடலில் அந்தமான் தீவு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
இந்தியாவில் பல இடங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அந்தமான் தீவு அருகே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 4.6 ரிக்டர் அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
அந்தமான் நிகோபார் தீவின் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து 302 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்