1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (07:40 IST)

ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்ற நாய்

பீகாரில் தெரு நாய் ஒன்று  ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்து நோயாளியின் காலை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீஹாரில் ராம்நாத் மிஸ்ரா என்ற இளைஞர் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்நாத்தின் காலை அகற்ற வேண்டும் என கூறிவிட்டனர். அதன் படி அவரது கால் ஆபரேஷன் மூல அகற்றப்பட்டது.
 
அகற்றப்பட்ட கால் ஆபரேஷன் தியேட்டரில் இருந்தது. அப்போது ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று அகற்றப்பட்ட ராம்நாத்தின் காலை கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனைக்குள் புகுந்து நாய் ஒன்று நோயாளியின் காலை எடுத்து சென்றது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.