திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (17:45 IST)

மணமகன் எஸ்கேப்; மருமகளை மனைவியாக்கிய மாமனார்!

பீகார் மாநிலத்தில் திருமண நாளன்று மணமகன் ஓடிப்போனதால், மாமனார் மணபெண்ணுக்கு தாலி கட்டி மருமகளை மனைவி ஆக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால், 65 வயதாகும் இவர் தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நிச்சயித்தார். ஆனால், இவரது மகனுக்கு துவக்கம் முதலே இந்த திருமண நிச்சயத்தில் விருப்பம் இல்லை. 
 
தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தந்தையிடம் கூறியும் அவர் இதை கேட்பதாய் இல்லை. எனவே, வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு திருமண நாள் அன்று தனது காதலியுடன் ஓட்டம் பிடித்தார். 
 
மண்டபத்தில் மணமகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக கூடாது என்ற நோக்கத்தில் மனமகளை திருமணம் செய்துக்கொண்டு தனக்கு மனைவி ஆக்கிக்கொண்டார். 
 
பெண் வீட்டுகாரர்களும் கவுரம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். 21 வயதே ஆன அந்த மணப்பெண்ணும் தனது மாமனாரை கணவனாக ஏற்றுக்கொண்டுள்ளார்.