திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2018 (13:49 IST)

தனிமையில் தவித்த தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

ராஜஸ்தானில் கணவனை இழந்து தனிமையிலிருந்த தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கீதா அகர்வாலின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க கீதாவின் இளைய மகள் சன்ஹிடா முடிவு செய்து இணையதளம் மூலம் மணமகன் தேவை என பதிவிட்டார். இதற்கு கீதா மட்டுமின்றி சன்ஹிடாவின் அக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மனம் தளராத சன்ஹிடா தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார். 
 
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார். அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கேன்சர் நோயால் இறந்ததாக கூறினார்.
 
இதையடுத்து சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துவைத்து குப்தாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தின் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக சன்ஹிடா தெரிவித்துள்ளார்.