மகள் திருமண அழைப்பிதழில் அரசாங்க சின்னம்; எம்.எல்.ஏ. விளக்கம்!
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ரத்தோர் அவரது மகள் திருமண அழைப்பிதழில் மாநில அரசின் சின்னத்தை அச்சிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்ததை அடுத்து பாஜக நிர்வாகிகள் மற்றிம் எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான நிகழ்வு இருந்து வருகிறது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ரத்தோர் அவரது மகள் திருமண அழைப்பிழத்தில் மாநில அரசின் சின்னத்தை அச்சிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் அரசாங்கத்தில் ஒரு பகுதி. அதனால் மாநில அரசின் சின்னத்தை அழைப்பிழதில் பயன்படுத்தினேன். இது குற்றமல்ல. இதேபோன்று பலர் செய்துள்ளதை நான் அறிவேன் என்று கூறியுள்ளார்.
நன்றி:ANI