புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (18:24 IST)

கால்பந்து விளையாடும் பசுமாடு : அசத்தலான வைரல் வீடியோ

பிரபல இந்திய கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா போக்லே என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் இளைஞர்கள் சிலர் கால்பந்தாடிக் கொண்டுள்ளார்கள். அப்போது மைதானத்திற்குள் நுழைந்த பசுமாடு இளைஞர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் மாடு, கால்பந்து வீரரைப் போன்று தன் காலில் பந்தை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்ததுதான். அதிலும் ஒருவர் அந்த பந்தை எடுத்து இன்னொருவருக்கு அடிக்க.. அதைப் பிடிக்க மாடு ஓடுகிறது..இப்படியே மாடு சுறுசுறுப்பாக ஓடி விளையடுகிறது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 
தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.