செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (17:50 IST)

கேரளாவில் பைக்கை துரத்தி ஓடிய புலி: அதிர்ச்சி வீடியோ

கேரளாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் ஒன்றில், பைக்கில் சென்ற வனத்துறை அதிகாரிகளை ஒரு புலி துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்திருக்கும் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில், நேற்று மோட்டார் பைக்கில், வனத்துறை அதிகரிகள் இருவர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு புலி, மோட்டார் பைக்கில் சென்ற அந்த இரு அதிகாரிகளையும் சில வினாடிகள் வேகமாக துரத்தி வந்தது.

இந்த சமபவத்தை மோட்டர் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வனவிலங்கு அதிகாரி தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்தார். சில வினாடிகளே கொண்ட அந்த வீடியோவில், ஒரு புலி மோட்டர் பைக்கை துரத்தி வருகிறது, பின்பு சாலையை கடந்து காட்டுக்குள் மறைகிறது.

இந்த வீடியோவை, அரசு சாரா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சில வினாடிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த விடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.