திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (17:41 IST)

லட்சுமி ராமகிருஷ்ணனின் அப்பா மரணம் - குடும்பமாக கொண்டாடிய கூத்து

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை இன்று காலமானார். தந்தையின் இழப்பை கொண்டாடிய  குடும்பத்தாரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பான  சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 
 
அந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு  தைரியமாகவும், வெளிப்படையாகவும் குரல் கொடுத்தவர் லட்சுமி. மேலும்  சமூகவலைத்தளங்களிலும் குற்றங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார் .
 
 ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆரோகனம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். 
 
இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன் தந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ள விதம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது,  எனது அப்பா உலக வாழ்வை  இன்றுடன் நீத்துவிட்டார். 97 வயதாகும் அவரின் மறைவால் அம்மா, அக்கா, அண்ணா என குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். மேலும், எங்கள் தந்தை இறப்பிற்கு நாங்கள் சோகம் அனுசரிக்கவில்லை. அதற்கு மாறாக அவரின் வாழ்க்கையை கொண்டாடுகிறோம் என அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.