புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (16:35 IST)

மரத்தில் மோதி தீப்பிடித்த கார்… புதுமண தம்பதி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

accident
மத்திய பிரதேச மாநிலத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உள்ளிட்ட 4 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீபத்தில் திருமணமான புதுமண தம்பதியர் உள்ளிட்ட 4 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர்.

இன்று அதிகாலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து இருந்தது.

இந்த விபத்து பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.