குசுகுசுவென போன் பேசிக்கொண்டே இருந்த அக்கா - கழுத்தை நெரித்துக் கொன்ற தம்பி
மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் தனது அக்காள் எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன் எந்நேரமும் போன் பேசிக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். தூங்கும் நேரத்திலும் அவர் போன் பேசிக் கொண்டே தான் இருப்பார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் தம்பி தூங்கிக் கொண்டிருக்கும் போது, இவர் குசுகுசுவென போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அவரது தம்பி எழுந்து ஏன் எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருக்கிறாய் என அவருடன் சண்டையிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது தம்பி, தலையணையை எடுத்து, அக்கா எனவும் பாராமல் அவரை மூச்சு திணறவைத்து கொன்றுள்ளான்.
இதனையறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர். மேலும் கொலை செய்த அந்த பெண்ணின் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.