திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (12:19 IST)

காதலித்த பெண்ணை ராக்கி கட்ட சொன்ன பள்ளி நிர்வாகம் - மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஆக்ராவில் தனியார் பள்ளி நிர்வாகம் செய்த செயலால் மாணவன் தற்கொலைக்கு முயற்சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் திலீப் குமார் ஷா என்ற மாணவன் படித்து வருகிறான். மாணவன் அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார்.
 
இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவன், மாணவி மற்றும் அவர்கள் பெற்றோர்களை நேரில் வரவழைத்தனர். அப்போது பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை அந்த மாணவனின் கையில் ராக்கி கயிறு கட்ட வற்புறுத்தியுள்ளனர்.  
 
இதனால் விரக்தியடைந்த மாணவன், பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்தான். படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவனின் பெற்றோர் பள்ளியின் முதல்வர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். போலீஸார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.