திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (12:52 IST)

மாப்பிள்ளை கருப்பாக இருப்பதால், திருமணத்தை ரத்து செய்த மணமகள்

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் மணமகன் கருப்பாக இருந்ததால், மணமகள் திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
 

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள கவுசாம்பி மாவட்டத்தில் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஷெர்பூரில் கடந்த மே 29  ஆம் தேதி ஒரு திருமணம்  நிச்சயிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் இருவீட்டு தரப்பிலும் ஜோராக நடந்து  கொண்டிருந்தது. திருமண நாளின்போது மாப்பிள்ளை தன் உற்றார் உறவினர்களுடன் பெரிய ஊர்வலமாக பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.

மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள்  திருமண மேடைக்கு வந்தார். அப்போது, மணமகனுக்கு மாலை அணிவிக்க மணப்பெண் மறுத்துவிட்டார்.

அவர் இப்படி செய்தது குடும்பத்தினர் உள்பட அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி மணமகளிடம் கேட்டதற்கு, எனக்குக் கருப்பான இளைஞரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்,

மேலும்  மாப்பிள்ளைக்கு வயதாகிவிட்டதாகவும், மணப்பெண்ணுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிய போதிலும் அவரை கட்டாயப்படுத்திய திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.