ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (18:37 IST)

பெங்களூரு ஹோட்டலில் வெடித்தது குண்டுதான்..! முதலமைச்சர் சித்தராமையா உறுதி..!!

blast
பெங்களூரு ஹோட்டலில் வெடித்தது குண்டு தான் என்று முதலமைச்சர் சித்தராமையா உறுதியாக தெரிவித்துள்ளார்.
 
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது.  இதில் ஓட்டல் ஊழியர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.  
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 
இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்துள்ளார். வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு தான் வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.