செருப்பு மாலை அணிவித்த நபர்: செம கடுப்பான பாஜக எம்.எல்.ஏ

MLA
Last Modified புதன், 21 நவம்பர் 2018 (08:48 IST)
மத்திரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவுக்கு வாலிபர் ஒருவர் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திரபிரதேசத்தில் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நகடா கச்சாட் பகுதியில் பாஜக எம்.எல்.ஏவும் வேட்பாளருமான திலிப் ஷெகாவத் மக்களிடையே வாக்கு சேகரிக்க சென்றார்.
 
அப்போது வாலிபர் ஒருவர் மாலை அணிவிக்க வந்தபோது பூமாலை என நினைத்து தலைகுனிந்தார் எம்.எல்.ஏ. ஆனால் அந்த நபர் அணிவித்தது செருப்பு மாலை. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப், அந்த மாலையை தூக்கி எறிந்தார். இதனால் அங்கி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :