வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:26 IST)

ஓடும் ரயிலில் பாஜக எம்.எல்.ஏ ஓட ஓட சுட்டுக்கொலை

குஜராத்தில் ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜெயந்தி பனுசாலி புஜ் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அவரை சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அவரது மார்பு மற்றும் தலைப்பகுதியில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஜெயந்தி பனுசாலி ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.