புரோ கபடி 2018: உபி அணியை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது குஜராத்

Last Modified வியாழன், 3 ஜனவரி 2019 (22:30 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடந்து வந்த புரோ கபடி 2018 போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணியுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது என்பதை முடிவு செய்யும் முக்கிய போட்டி இன்று நடந்தது.

உபி மற்றும் குஜராத் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் வெற்றிக்கு தீவிரமாக விளையாடின. இருப்பினும் குஜராத் அணிக்கு அதிர்ஷ்டமும் சேர்ந்து கைகொடுத்ததால் உபி அணியை 38-31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


வரும் 5ஆம் தேதி மும்பை
எஸ்விபி மைதானத்தில் இரவு 8 மணிக்கு பெங்களூரு அணியுடன் குஜராத் அணி இறுதி போட்டியில் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது என்பதை அறிய நாடே காத்திருக்கின்றது


இதில் மேலும் படிக்கவும் :