வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (09:22 IST)

குலுங்கு குலுங்கி சிரித்த மனைவி: செம கடுப்பாகி கணவன் செய்த வேலை

சென்னையில் மனைவி வேறு நபர்களுடன் சிரித்து பேசியதால் கணவன் அவரை 19வது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டை சேர்ந்த சந்தோஷ்குமார் - விபுலா தேவி தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் 26 மாடிகளைக் கொண்ட ராணுவ குடியிருப்பு கட்டுமானப் பணியில்  ஈடுபட்டு வந்தனர்.
 
விபுலா தேவி மற்றவர்களிடம் சகஜமாக பேசக்கூடியவர். மனைவி மற்ற நபர்களிடம் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாத சந்தோஷ், இதுகுறித்து மனைவியிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் விபுலா தேவி கணவரின் பேச்சை கேட்கவில்லை.
 
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபுலா தேவி, வேலை செய்யும் ஆட்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த சந்தோஷ், விபுலாதேவியை தலையில் தாக்கி, அவரை 19வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார்.
 
பின்னர் போலீஸாரிடம் மனைவி மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், சந்தோஷ் தான் கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரோ என சந்தேகித்தனர். அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. சந்தேக புத்தியால் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்த அயோக்கியனுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்.