திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (11:10 IST)

ரஜினியுடன் பாண்டிராஜைக் கோர்க்கப் பார்த்த சன்பிக்சர்ஸ்!

நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சுமாராக போனது. இதையடுத்து அடுத்து உடனடியாக தனது அடுத்த படத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் இப்போது பாண்டிராஜும் அதில் ஒருவராக இணைந்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் படம் இயக்குவது சம்மந்தமாக ரஜினியை சந்திக்கவில்லை என பாண்டிராஜ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அதனால் ரஜினி படத்தையும் அவரை இயக்க வைக்கலாம் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.