வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:05 IST)

சூர்யாவுக்கு ஓவியத்தை பரிசாக அளித்த ரசிகர்கள்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் அவருக்கு அன்பளிப்பாக ஓவியத்தை வழங்கினர்.

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் காரைக்குடி படப்பிடிப்பு 51 நாட்கள் நடைபெற்றது என்பதும் அதன் பின் சில நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளனர். இது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. குற்றாலத்தில் ஒரு சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் சூர்யாவின் ஓவியம் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தனர்.