திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (17:59 IST)

80 வயது முதியவர் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ: அதிர்ச்சியில் பொதுமக்கள்

பெண்களுக்கு பாலியல் தொல்லை உலகம் முழுவதும் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. பாலியல் என்றால் என்ன என்ற விபரம் அறியாத குழந்தைகள் நசுக்கப்படுவது அதிலும் இந்த கொடூர சம்பவத்தில் வயது அதிகமான முதியோர்கள் ஈடுபட்டு வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.
 
இந்த நிலையில் டுவிட்டரில் 80 வயது முதியவர் ஒருவர் 3வயது சிறுமியை காட்டுப்பகுதி ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை அப்பகுதி பொதுமக்கள் கண்டுபிடித்து தடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோவும் வெளிவந்து சமூக இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகை வரலட்சுமி, பிரதமர் மோடிக்கு காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி அவர்களே நீங்கள் இப்படிப்பட்ட இந்தியாவைத்தான் ஆட்சி செய்ய நினைத்தீர்களா? உடனடியாக பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றுங்கள்' என்று கூறியுள்ளார். இனியும் இத்தகைய கொடூரமான சம்பவங்களுக்கு இடமளித்தால் நாட்டில் பெண் குழந்தைகளை வளர்ப்பதே ஒரு சவாலாகிவிடும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. மேலும் சர்ச்சைக்குள்ளான இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது