திங்கள், 10 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2025 (13:24 IST)

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதிஎன்ற பகுதியில், 80 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதிபகுதியில், 80 வயது மூதாட்டி திடீரென அலறிய சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கூட்டத்தை பார்த்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் தப்பியோடிய இளைஞரை தேடி வந்தனர். சம்பவம் நிகழ்ந்த போது, அந்த வீட்டில் உள்ள அனைவரும் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
 
மேலும், அந்த இளைஞர் மது போதையில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. மூதாட்டியின் கை கால்களை கட்டி, வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்ய முயன்ற போதே அக்கம் பக்கத்தினர் வந்து, அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
 
இது குறித்து காவல்துறையினர், தப்பிய இளைஞரை கைது செய்ததாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த இளைஞர் 24 மணி நேரமும் முழு போதையில் இருப்பதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Edited by Siva