வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்: புலம்பெயர் பறவைகள் மூலம் பரவலா?
புலம்பெயர் பறவைகள் மூலமாக நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் தொடர்ந்து பறவைகள் இறந்து விழும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் பல பகுதிகளில் 100-க்கும் அதிகமான காகங்கள் இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சோதனையில் 10க்கும் மேற்பட்ட காகங்களுக்கு பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில், இன்றும் டெல்லியில் காகங்கள், வாத்துகள் பல இறந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுமார் 9 மாநிலங்களில் இதுவரை பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம், டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பறவைக்காய்ச்சல் பரவிய மாநிலங்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
புலம்பெயர் பறவைகள் மூலமாக நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான பறவைகள் காய்ச்சல் காரணமாக செத்து மடிகின்றனர். அதிகபட்சமாக 4 லட்சம் பறவைகள் அரியானாவில் உயிரிழந்துள்ளது.
கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல், அரியானா மற்றும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.