1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

பொங்கலுக்கு பொன் வாங்குங்க... ரூ.1500 வரை குறைந்தது தங்கம்!!

தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது.   
 
தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.37,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 குறைந்து  ரூ.4,662-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
பஸ் லேட்டா வந்துச்சு மிஸ்.. மாணவனுக்காக போக்குவரத்து கழகம் எடுத்த முடிவு!