வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (09:59 IST)

அதிகாலையில் நடந்த விபத்தில் 8 பேர் பலி..! தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து.!!

accident
நெல்லூர் அருகே தனியார் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது.
 
அப்போது அந்த விபத்திலிருந்து தப்புவதற்காக லாரியை ஓட்டுநர் வலது புறமாக திருப்ப முயன்றபோது, எதிர் திசையில் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதியது.
 
nellore accident
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 
விபத்தில் சேதம் அடைந்த அரசு பேருந்து மற்றும் தனியார் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.