1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (21:17 IST)

உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு- 4 பேர் கைது

ooty-accident
உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இன்று 7 தொழிலாளர்கள் உயிரிந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி இன்று  நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்த்போது, பழைய கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட  7 பேர்  உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள், ஜாகிர் அகமது, ஆனந்த்ராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அனுமதிக்கு மாறாகவும், பணியாளர்கள் பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொண்ட இந்தக் கட்டடத்திற்கு உதகை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.