புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (13:16 IST)

இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்!

இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்!
இந்தியாவில் தற்போது 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் 6ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் எப்போது என்பது குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்
 
இந்தியாவில் தற்போது 5ஜி இன்டர்நெட் தொழில்நுட்பத்தை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் விரைவில் 6ஜி தொழில்நுட்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என்றும் 2023 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்
 
இந்தியாவில் இன்னும் 5ஜி தொழில்நுட்பமே வராத நிலையில் 6ஜி தொழில்நுட்பம் குறித்து அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது