வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (08:47 IST)

3 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிய மத்திய அரசு: விடுவிக்க மறுக்கும் மம்தா பானர்ஜி!

மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா சென்றபோது அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்லெறிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது/ இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் ஜேபி நட்டா சுற்றுப்பயணம் செய்த போது உரிய பாதுகாப்பு தருவதற்கு தவறியதாக இந்த மூன்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜியின் மாநில அரசு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசுக்கு இந்த மூன்று அதிகாரிகளும் பணி மாற்றம் செய்ய முடியும் 
 
ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 3 அதிகாரிகளை விடுவிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் எனவே 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என முதல்வர் கூறியிருப்பதாக தெரிகிறது 
 
ஏற்கனவே மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் மோதலை மேலும் பெரிதாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது