செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:00 IST)

2200 கிமீ சைக்கிள் பயணம் செய்யும் 68 வயது மூதாட்டி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மகாராஷ்டிராவில் இருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கோயிலுக்கு சைக்கிளிலே செல்ல முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஒரு மூதாட்டி.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 68 வயதான ரேகா தேவ்பன்கர். இவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோயிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்காக அவர் 2200 கிமீ தூரத்தை சைக்கிளிலேயே கடக்க முடிவு செய்துள்ளார்.

அதையொட்டி அவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 40 கி மீ என பயணம் மேற்கொள்கிறார். இரவு நேரங்களில் மட்டும் பயணம் மேற்கொள்வதில்லை. இவரின் சைக்கிள் பயணம் சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளன.