1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:22 IST)

6 நாள் சம்பளம் கட்: கேரள அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வந்தாலும் அனைத்து மாநில அரசுகளும் சிறப்பான நடவடிக்கை எடுத்து வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தம் மாநில மக்களை கொரோனா வைரசிடம் இருந்து காப்பதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கிட்டத்தட்ட கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றே கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீரென அவர் எடுத்த ஒரு முடிவு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. கேரள மாநிலத்தில் பணிபுரியும் ரூபாய் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை கட் செய்ய அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் ஆறு நாட்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் என அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இருப்பினும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த ஆறு நாள் சம்பளத்தை அரசு ஊழியர்கள் விட்டுத் தர வேண்டும் என்றும் பல தனியார் ஊழியர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் வேலையின்றி வருமானமின்றி பசியிலும் பட்டினியிலும் இருப்பதால் அரசு ஊழியர்கள் இந்த 6 நாட்கள் சம்பளத்தை விட்டுத் தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் தொடர்பாக கேரள அரசு எடுத்துள்ள முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது