புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (12:24 IST)

இது வயிறுதானா? இல்லை வேறெதுவுமா? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகமது மக்சூட் என்பவர் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.


 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாத்னா மாவட்டம் சோஹாவாலை சேர்ந்த முகமது மக்சூர்(32) என்பவர் கடுமையான வயிற்று வலி காரணமாக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இவரது உடலை பரிசோதனை செய்துள்ளனர். எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிந்துள்ளது.
 
இதையடுத்து 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்து அந்த பெருட்களை வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர். அறுவை சிகிச்சையில் ஷேவிங் பிளேடுகள், ஊசிகள், செயின், நாணயங்கள், கண்ணாடு துண்டுகள் என 5 கிலோ அடங்கிய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
 
முகமது மனநிலை சரியில்லாதவர். அவர் யாருக்கும் தெரியாமல் இரும்பு பொருட்களை விழுங்கியுள்ளார். இங்கு வருவதற்கு முன் இவருக்கு ரேவா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது முகமது நன்றாக உள்ளார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.