திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (14:27 IST)

நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள்; காந்தம் மூலம் வெளியே எடுத்த மருத்துவர்கள்

கொல்கத்தாவில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்த 639 ஆணிகளை மருத்துவர்கள் காந்தத்தின் உதவியோடு வெளியே எடுத்தனர்.


 

 
கொல்கத்தாவின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோபர்டங்கா பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் பல நாட்களாக ஆணி மற்றும் மண் ஆகியவற்றை உண்டு வந்துள்ளார். திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவருக்கு எண்டோஸ்கோபி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 
 
அறுவை சிகிச்சையில் வயிற்றில் இருந்த ஆணிகளை காந்தம் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். நோயாளி உடல்நலனை தற்போது மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.