வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 ஜூன் 2018 (15:14 IST)

கோவில் வளாகத்தில் நேபாள பெண் கற்பழிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில் வளாகத்தில் நேபாள பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறு பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். 
 
நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் உத்தரகாண்ட் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா கோவிலின் வளாகத்தில் தங்கியுள்ளார்.
 
அப்போது கோவிலில் சேவை செய்யும் தன்னார்வல ஊழியர்கள் 2 பேர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில் அந்த 2 பேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். கோவில் வளாகத்திலே பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.