ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (11:33 IST)

வாய் பேசாத, காது கேளாத சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 நாட்களுக்கு பிறகே தெரிந்த சோகம்

ராஜஸ்தானில் வாய் பேசாத, காது கேளாத பெண் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜஸ்தானை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமி சம்பவ நாளன்று வீட்டருகே உள்ள கடைக்கு சென்ற போது ஐவர் கடத்தி சென்று மாற்றி மாற்றி கற்பழித்து மாலை 5 மணிக்கு கடத்திய இடத்திலேயே பெண்ணை போட்டுவிட்டு சென்றுள்ளனர். 
 
சிறுமியால் பேச முடியாது என்பதால் இதனை எப்படி கூறுவது என தெரியாமல் இருந்துள்ளார். ஆனால் சம்பவத்திற்கு பிறகு சிறுமி உடலநலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 
 
பின்னர் சிறுமியின் தாய் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க, அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.