ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (07:06 IST)

இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் எவை எவை?

இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என நான்கு கட்ட தேர்தல் முடிவைடைந்துவிட்டது. இந்த நிலையில் மே 6ஆம் தேதியான இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது
 
இன்று ஏழு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் பின்வருமாறு:
 
பீகார்: 5
ஜார்கண்ட்: 4
மத்திய பிரதேசம்: 7
ராஜஸ்தான்: 12
உத்தரபிரதேசம்: 14
மேற்குவங்காளம்: 7
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியி்லும், இன்னொரு தொகுதியில் மூன்றில் ஒரு பங்கிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
 
இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற காத்திருக்கின்றனர். இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது