மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
மத்திய பிரதேச மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டியின் இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் அங்கு போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மிக் கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வரும் ஆன அரவிந்த் கெஜ்வால் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் இலவசம் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் உதவி தொகையாக வருவாய் 3,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran