திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (15:19 IST)

லிஃப்டில் சிக்கிக் கொண்ட 3 சிறுமிகள்.....அதிர்ச்சி சம்பவம்

kaziyapath
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட்டில் 3 சிறுமிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச  மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் லிஃப்ட் உள்ளது. இதில், சென்ற 3 சிறுமிகள் சென்றபோது, திடீரென்று லிஃப்ட் பாதியிலேயே நின்றுபோனது.

இதனால், அதிர்ச்சி அடைந்த  சிறுமிகள் மூவரும் கூச்சலிட்டனர். சிறுமிகள் 3 பேரும் லிஃப்டில் பாதியில் சிக்கிக் கொண்ட சிசிடிவவி காட்சிகள் வெளியானதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சுமார் 25   நிமிடங்கள் கழித்து, அருகில் வசிப்போர் லிப்ட் நின்றுபோனதை அறிந்து, சிறுமிகளை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழ்க்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj