1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (12:26 IST)

ஏரி நீர் குடித்து 3,000 வாத்துகள் பலி: காரணம் என்ன?

ரவுலபாடு கிராமத்தில் ஏரியில் நீர் குடித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 வாத்துகள் இறந்தன.


ஆந்திர மாநிலத்தின் பெல்லகுரு மண்டலம், ரவுலபாடு கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் குடித்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 வாத்துகள் இறந்தன. 15,000 வாத்துகளை வைத்திருக்கும் பெல்லகுரு மண்டலம் கப்பகுண்டா கண்டிகாவைச் சேர்ந்த மாரி முனிராஜா என்பவருக்கு சொந்தமான வாத்துகள் இவை.

நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குறித்த 3 வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இருந்தன. இறந்த வாத்துகளை கிராம மக்கள் உதவியுடன் மீட்டார்.

கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.

ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாழ்த்துக்கள் இறந்தது தெரிய வந்தது. தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.